சிக்னல் பழுது: சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம் - பயணிகள் அவதி

15 hours ago 1

விழுப்புரம்,

விழுப்புரம் ரெயில்வே மார்க்கத்தில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி விரைவு ரெயில்கள், புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரெயில்கள் வருகையில் சுமார் 1 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.

மேலும் நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னைக்கு தாமதமாக செல்கின்றன. ரெயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article