சிக்கிமில் பொறியியல் கல்லூரி மாணவி விடுதி கட்டிடத்தில் இருந்து விழுந்து பலி

4 hours ago 1

கேங்டாக்,

சிக்கிமின் பாக்யாங் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் படிப்பை படித்து வந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில், விடுதியின் 8-வது தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் அவர் பலியானார் என போலீசார் நேற்று தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மரணம் அடைந்ததற்கான சூழ்நிலை பற்றி தெளிவாக தெரியவில்லை. உண்மையை உறுதி செய்ய விசாரிக்கப்பட்டு வருகிறது.

அசாமை சேர்ந்தவரான அந்த மாணவி விடுதி கட்டிடத்தில் இருந்து, தவறி விழுந்து விட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம், இதே விடுதியின் 7-வது தளத்தில் இருந்து கீழே விழுந்து மாணவி பலியானார். இந்நிலையில், ஓராண்டிற்குள் மற்றொரு மாணவி மரணம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article