'சிக்கந்தர்' படத்தின் டிரெய்லர் வெளியானது

1 day ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 30-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் 'சிக்கந்தர்' படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இது குடும்பங்கள், ரசிகர்கர்கள், காதலர்கள்,என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக மாஸ் கமெர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.

Ab Sikandar Mud gaya The ultimate ride of action, emotion and drama begins now! #SikandarTrailer OUT NOW https://t.co/882SqaLvFM #Sikandar releases in theatres near you on 30th March 2025 @BeingSalmanKhan In #SajidNadiadwala's #Sikandar @iamRashmika

— A.R.Murugadoss (@ARMurugadoss) March 23, 2025
Read Entire Article