
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எலைட் நடுவர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் அல்லாவுதின் பலேகர் (தென் ஆப்பிரிக்கா), அலெக்ஸ் வார்ப் (இங்கிலாந்து) ஆகிய இரண்டு பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவில் மொத்தம் 12 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து நிதின் மேனன் மட்டும் இடம் பிடித்துள்ளார். இந்த குழுவில் அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து 3 பேரும், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து தலா 2 பேரும் இடம் பிடித்துள்ளனர்.
இந்த குழுவில் இதற்கு முன்னர் இடம் பெற்றிருந்த மைக்கேல் காப் (இங்கிலாந்து), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்) இருவரும் தற்போது இந்த குழுவில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி. எலைட் நடுவர்கள் குழு (2025-2026) விவரம்:-
குமார் தர்மசேனா (இலங்கை), கிறிஸ்டோபர் கேப்னி (நியூசிலாந்து), அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தென் ஆப்பிரிக்கா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து), நிதின் மேனன் (இந்தியா), அல்லாஹுதீன் பலேக்கர் (தென் ஆப்பிரிக்கா), அஹ்சன் ராசா (பாகிஸ்தான்), பால் ரீபெல் (ஆஸ்திரேலியா), ஷர்புதூலா இப்னே ஷாஹித் (வங்காளதேசம்), ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ப் (இங்கிலாந்து).