
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே நாங்கூர் வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருள, தேருக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேரோட்டத்தை பட்டாச்சாரியார்கள் வேதை ராஜன், ஆசிரியர் பாலாஜி ஆகியோர் வடம் பிடித்து தொடக்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். தேர் நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.