சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்..!

6 months ago 24
அரக்கோணம் அருகே விபத்து தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர் பலியானதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாராஞ்சியை சேர்ந்த லாரி ஒட்டுனர் ராபர்ட் என்பவருக்கு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை அழைத்துச் சென்ற கார் , மற்றொரு கார் மீது மோதிய நிலையில் அந்த காரில் வந்தவர்கள் , ராபர்ட்டின் காரை தடுத்து வாக்குவாதம் செய்தனர். இதனால் காலதாமதமாக அரக்கோணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராபர்ட் உயிரிழந்ததாக கூறப்படுகின்ரது. அவரது உயிரிழப்புக்கு காரணமான தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
Read Entire Article