தேவையான பொருட்கள்
2கப் சிகப்பு அவல்
1உருளைக் கிழங்கு
1/4கப் கேரட்,பச்சை பட்டாணி
1வெங்காயம்
2பச்சை மிளகாய்
1டேபிள் ஸ்பூன் முந்திரி
1டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
தாளிக்க:
2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1/4டீஸ்பூன் கடுகு
1/2டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
1/2டீஸ்பூன் கடலை பருப்பு
2டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
கறிவேப்பிலை
மல்லி இலை
செய்முறை:
சிகப்பு அவல் எடுத்து தயாராக வைக்கவும். வெங்காயம்,காய்கறிகள் எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி,உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.அவலை தண்ணீரில் நன்கு கழுவி பிழிந்து தண்ணீரை இல்லாமல் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.காய்கறிகள் நன்கு வெந்ததும் நன்கு கலந்து தயாராக உள்ள அவலை சேர்த்து கலக்கவும்.பின்பு எழுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும்.தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.கடைசியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.இப்போது மிகவும் சுவையான ஆரோக்கியமான,சத்தான உணவான சிகப்பு அவல் காய்கறி உப்புமா சுவைக்கத்தயார். தயாரான உப்புமாவை எடுத்து பரிமாறும் பௌலில் சேர்த்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
The post சிகப்பு அவல் காய்கறி உப்புமா appeared first on Dinakaran.