புதுடெல்லி: இந்திய கணக்கு தணிக்கை ஆணையத்தின்(சிஏஜி) தலைவராக கிரிஷ் சந்திர முர்மு பதவி வகித்து வந்தார். இவரது பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து உயர் கல்வித்துறை செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே.சஞ்சய் மூர்த்தி இந்திய கணக்கு தணிக்கை ஆணையத்தின் புதிய தலைவராக கடந்த திங்கள்கிழமை(18ம் தேதி) நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள கணதந்திர மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு கே.சஞ்சய் மூர்த்தி பதவி ஏற்றார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முன்னிலையில் அவர் பதவி பிரமாணமும், உறுதிமொழியும் எடுத்து கொண்டார். 1989ம் ஆண்டு இமாச்சலபிரதேச பிரிவை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கே.சஞ்சய் மூர்த்தி விரிவான நிர்வாக அனுபவம் பெற்றவர்.
The post சிஏஜி தலைவராக கே.சஞ்சய் மூர்த்தி பதவி ஏற்பு appeared first on Dinakaran.