சி.எஸ்.கே அணியில் மீண்டும் தோனி - தக்கவைத்த வீரர்கள் அறிவிப்பு

2 months ago 13

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் இன்று (அக்.31-ந்தேதி) மாலைக்குள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதீசா பத்திரானா என 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.

இதனையடுத்து, சி.எஸ்.கே அணியில் மீண்டும் தோனி விளையாட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தொடர்ந்து, மற்ற அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களை அறிவித்து வருகின்றன.

Read Entire Article