சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை

1 month ago 13

விக்கிரவாண்டி, அக். 2: ஏழை, எளிய மாணவர்களின் பள்ளி வருகையை அதிகப்படுத்தவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் அரசு பள்ளிக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக காலை சிற்றுண்டி, மதிய உணவு, இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள், தமிழ் புதல்வி திட்டம் போன்ற திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவாமத்தூர் அருகே முத்தியால்பேட்டைக்கு செல்லும் விழுப்புரம்-செஞ்சி சாலையோரம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் ஒரே இடத்தில் அதிகப்படியாக குவிந்து கிடந்தது. இதைபார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சீருடைகள் மற்றும் பைகளை எடுத்து சென்றனர்.

தகவல் அறிந்த திருவாமத்தூர் வருவாய் ஆய்வாளர் தெய்வீகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் சீருடைகள், பைகளை மூட்டைகளாக கட்டி விக்கிரவாண்டி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தாசில்தார் யுவராஜ் இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலிசார் மாணவர்களின் சீருடைகள், பைகளை பள்ளியை சேர்ந்த ஊழியர்கள் யாரேனும் சாலையோரம் குவியலாக வீசி சென்றனரா, அல்லது மாணவர்கள் வீசி சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article