சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 நாய்கள் பலி

3 months ago 21
கடலூரில் அருகே உள்ள கோண்டூர் தெருவில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் அவ்வழியாக சென்ற 3 நாய்கள் பரிதாபமாக இறந்தன. அதிகாலையிலேயே மின்கம்பி அறுந்து விழுந்ததாகவும், அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் மின்சாரத்துறைக்கு தகவல் அளித்துவிட்டு, குடியிருப்புவாசிகளுக்கு செல்போன் மூலம் தெரிவித்து அவ்வழியாக யாரும் வராமல் தடுத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
Read Entire Article