சாலையில் தேங்கிய தண்ணீரில் கப்பல் விட்டு கம்யூனிஸ்ட் போராட்டம்

6 months ago 17

 

திருப்பூர்: திருப்பூர் பெரிய கடை வீதி பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. பெரிய பள்ளிவாசல், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவ பெருமாள் கோயில் உள்ளிட்டவை உள்ளது. இதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்லும். அங்கு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய ஓராண்டிற்கு முன் குழி தோண்டப்பட்டது. குழாய் சரிசெய்யப்பட்டு குழி மூடப்பட்டது.

இருப்பினும் சாலை அமைக்காததால் மீண்டும் அப்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளம் ஏற்பட்டு குடிநீர் பள்ளத்தில் தேங்கி நிற்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால் தலைமையில் பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் காகித கப்பலை விட்டு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் தெற்கு மாநகர குழு உறுப்பினர் செந்தில், மெஷின் வீதி செயலாளர்கள் செல்லமுத்து, சுந்தர்ராஜன், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளமான சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

The post சாலையில் தேங்கிய தண்ணீரில் கப்பல் விட்டு கம்யூனிஸ்ட் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article