ஹாசன்: சாலையில் சென்று கொண்டிருந்த கார்திடீரென தீப்பற்றி தம்பதி உயிர் தப்பிய சம்பவம் பேலூர் அருகே நடந்துள்ளது. சிக்கமகளூரில் இருந்து சுப்ரமணியாவுக்கு டாக் சேஷாத்ரி என்பவர் மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில், நேற்று காலை ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவின் கடேகர்ஜே கிராமத்தின் அருகே வந்த போது காரில் புகை வந்தது. இதை கவனித்த தம்பதி சாலையோரம் காரை நிறுத்தி காரில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.
சிறிது நேரத்தில் அந்த கார் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியில் யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. சில மணிநேரம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்த தம்பதி பின்னர் காவல்நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, அரேஹள்ளி காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அந்த ஷார்ட் சர்க்கியூட்டால் எரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அரேஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் appeared first on Dinakaran.