சாலையில் தரையிறங்கியபோது விபத்து.. ஆட்டோ மீது விமானம் மோதி 4 பேர் பலி

2 months ago 17

கர்த்தூம்:

ஆப்பிரிக்க நாடான சூடானில் விவசாயம் அதிகம் நடைபெறும் மாநிலம் கெடாரெப் மாநிலம். பெரும்பாலான பகுதிகளில் மழையை மட்டுமே நம்பி செய்யப்படும் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. பரந்து விரிந்த பகுதிகளில் மானாவாரி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதற்கு சிறிய ரக விமானங்களை பயன்படுத்துகின்றனர்.

அவ்வகையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறிய ரக விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. அந்த விமானம், விவசாய நிலப்பகுதியில் உள்ள சாலையில் தரையிறங்கியபோது, திடீரென எதிரே ஆட்டோ வந்தது. ரன்வேயில் வேகமாகச் சென்ற விமானம், கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கடுமையாக சேதம் அடைந்தது. அதில் இருந்த விவசாய தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் பலத்த காமடைந்தனர்.

விமானத்தின் இறக்கை மற்றும் புரொபெல்லர் சேதமடைந்தது. விமானத்தில் இருந்த 3 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

Read Entire Article