விருதுநகர், ஜன.11: சாலை பணியாளர்கள் முக்காட்டு போட்டு போராட்டம் நடத்தினர். விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குமார்பாண்டி தலைமையில் கருப்புத்துணி முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. சாலைப்பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 60 கி.மீ ஒரு சுங்கச்சாவடி என தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி அமைத்து தனியார் மூலம் வசூல் நடத்த முயலும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் நடைமுறைக்கு வந்தால் 5 ஆயிரம் பணியிடங்கள் ஒழிக்கப்படும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post சாலைப்பணியாளர்கள் சங்கம் முக்காடு போட்டு போராட்டம் appeared first on Dinakaran.