சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதால் விபத்து: காரைக்குடியில் விழிப்புணர்வு பிரசாரம்

3 months ago 19

 

காரைக்குடி, அக்.8: சாலைகளில் தேங்காய், பூசணிக்காய் உடைப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி மதுரையை சேர்ந்தவர், காரைக்குடியில் பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மதுரை வலசேரிப்பட்டியை சேர்ந்த சரவணன் கைகளில், பூசணிக்காய் மற்றும் தேங்காய் வைத்துக் கொண்டு நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பஸ் ஸ்டாண்டில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் சாலைகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் கண் திருஷ்டி என கூறி பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைப்பதால் விபத்துகள் ஏற்படுவது குறித்து விழிப்புணர்பு பிரசாரம் மேற்கொண்டார்.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், கண் திருஷ்டி என கூறி பண்டிகை மற்றும் வார நாட்களில் சாலைகள், தெரு சந்திப்புகளில் தேங்காய், பூசணிக்காய் உடைக்கும் பழக்கம் நீண்ட காலமாக உள்ளது. தற்போது வர உள்ள ஆயுத பூஜைக்கு அதிகளவில் இதுபோன்று சாலைகளில் உடைப்பார்கள் இதனை தவிர்க்க வலியுறுத்தியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

The post சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதால் விபத்து: காரைக்குடியில் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Read Entire Article