சாலை விதி மீறல்களை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்: ஒன்றிய அமைச்சர் கட்கரி வலியுறுத்தல்

3 weeks ago 4

புதுடெல்லி: போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். டெல்லியில் 12-வது போக்குவரத்து உட்கட்டமைப்பு தொழில்நுட்ப கண்காட்சி நேற்று நடந்தது. இதில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில்,‘‘ சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதில், ஏராளமானோர் உயிர் இழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18-36 வயதுக்குட்பட்டவர்கள். சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆகும். சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது அரசின் முன்னுரிமையாகும். இதை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்திய உலகளாவிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு(ஏஐ) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இதில், அபராத தொகை துல்லியமாக வசூலிக்கப்படும்’’ என்றார்.

The post சாலை விதி மீறல்களை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்: ஒன்றிய அமைச்சர் கட்கரி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article