சாலை, தெருவிளக்கு வசதி கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

2 months ago 7

கோவில்பட்டி, டிச. 4: கோவில்பட்டியில் தியாகி லீலாவதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் ஜெயசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் மாரியப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் உத்தண்டராமன் சிறப்புரை ஆற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதிகளை உடனே செய்து தர வேண்டும். 2001-02ல் வழங்கிய இலவச பட்டாவை ரத்து செய்யும் முயற்சியை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

The post சாலை, தெருவிளக்கு வசதி கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article