சாலை தடுப்பு மீது மோதி நின்ற லாரி மீது மாநகர பேருந்து மோதல்: புழல் அருகே பயணிகள் காயமின்றி தப்பினர்

4 weeks ago 9

புழல்: சென்னை மாதவரத்தில் லோடு ஏற்றிக்கொண்டு செங்குன்றம் நோக்கி லாரி ஒன்று காலை புறப்பட்டது. புழல் அடுத்த தண்டல் கழனி பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த நேரத்தில் பின்னால் கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த (தடம் எண் 114) என்ற மாநகர பேருந்து லோடு லாரி மீது மோதியது.

இதில் மாநகர பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. கண்ணாடிகள் உடைந்து சிதறியது. ஆனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்ட வசமாக காயம் ஏதுமின்றி தப்பினர். விபத்து காரணமாக புழல் – செங்குன்றம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்து மற்றும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை தடுப்பு மீது மோதி நின்ற லாரி மீது மாநகர பேருந்து மோதல்: புழல் அருகே பயணிகள் காயமின்றி தப்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article