இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்களை பெற்றதில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் கருவூலத்துக்கு வர வேண்டிய பணத்தை, அல் காதிர் அறக்கட்டளையில் வரவு வைத்துள்ளார். அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றார்.
இந்த செயலால் அந்த நாட்டின் அரசுக்கு ரூ.5000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டி இம்ரானுக்கும் அவர் மனைவிக்கு எதிராகவும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறையும், அவர் மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இம்ரான் கானின் அல் காதிர் பல்கலைகழகத்தின் நிலத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
The post ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை: பாக். நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.