பாலக்கோடு, மே 10: பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட கனம்பள்ளி தெருவில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, ஒன்றிய திமுக செயலாளர் ரவி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் மோகன், குமரன், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, அவைத் தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாலக்கோடு பேரூராட்சியில் 8வது வார்டில் கனம்பள்ளி தெரு முதல், மந்தைவெளி வரையிலும், 2வது வார்டில் உள்ள மாயன் கடை முதல், செங்காளியம்மன் கோயில் வரையிலும் உள்ள தெருக்களுக்கு புதிய மூடப்பட்ட வகையில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிக்கு, நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கழிவுநீர் கால்வாய் மற்றும் தார்சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ராஜசேகர், விமலன், சரவணன், மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள்
கலந்துகொண்டனர்.
The post சாலை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.