மதுராந்தகம்: சாலவாக்கம் மற்றும் எடமச்சி ஊராட்சியில் பயணிகள் புதிய நிழற்குடையை சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சி மற்றும் எடமச்சி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை கட்டி தர வேண்டும் என உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான க.சுந்தரிடம் அப்பகுதி மக்கள் சார்பில் மனு அளித்தனர்.
இதை பரிசீலனை செய்து உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இரண்டு ஊராட்சிகளிலும் பேருந்து நிழற்குடை கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் சாலவாக்கம் ஊராட்சியில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் வரவேற்றார். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிழற்குடை அமைத்து தந்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதேபோன்று, எடமச்சி கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிகளில் அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், அவைத்தலைவர் ரவி, கவுன்சிலர்கள் சேகர், சுப்பிரமணி துணைத்தலைவர் நந்தா, எடமச்சி ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
The post சாலவாக்கம் மற்றும் எடமச்சி ஊராட்சியில் புதிய பயணிகள் நிழற்குடை: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.