சார்லஸ்டன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

1 month ago 10

கலிபோர்னியா,

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சார்லஸ்டன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா (ரஷியா) உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெகுலா 6-2, 2-6 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இவர் இறுதிப்போட்டியில் சக நாட்டவரான சோபியா கெனின் உடன் மோத உள்ளார்.


Read Entire Article