ஐ.பி.எல்-ல் அசத்தும் கே.எல்.ராகுல்... இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு..? - வெளியான தகவல்

5 hours ago 1

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, குஜராத், பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. லக்னோ, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி இடையே போட்டி நிலவுகிறது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக ஆடி வரும் கே.எல்.ராகுல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 493 ரன்கள் குவித்துள்ளார். கேஎல்.ராகுல் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடி இருந்தார். ஏறக்குறைய அவருடைய சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்பட்டது. அதன் பின்னர் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடி வருகிறார்.

இந்நிலையில், தற்போதையை ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக ஆடி வரும் கே.எல்.ராகுலுக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கொடுக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கே.எல்.ராகுல் எல்லா இடங்களிலும் விளையாடுவதாலும், விக்கெட் கீப்பர் ஆகவும் இருப்பதாலும், பி.சி.சி.ஐ இன்னொரு வாய்ப்பைக் அவருக்கு கொடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

Read Entire Article