
கலிபோர்னியா,
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சார்லஸ்டன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றைய பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சக நாட்டவரான சோபியா கெனின் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சோபியா கெனினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.