மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்கள். அது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிப்பவர்களை அடிப்பதும், கொலைமிரட்டல் விடுப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.