சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

3 months ago 7

காரைக்குடி, பிப். 8: காரைக்குடி அருகே அமராவதிபுதூர்  சாரதாநிகேதன் மகளிர் கலைக்கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம் கல்லூரி நிறுவனர் மத் சுவாமி ஆத்மானந்த மகராஜ் அருளாசியுடன் நடந்தது. துறைத்தலைவர் கலைவாணி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் சிவசங்கரிரம்யா முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர்கள் யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா, யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். தொழில் மேம்பாட்டு இயக்குநர் பிரவீன்குமார் சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப பயிற்சியாளர் அப்துல் ஹாசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கை முன்னிட்டு நடத்தப்பட்ட வாய்மொழித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் பிரியா நன்றி கூறினார்.

The post சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article