சாரண, சாரணியர்களை வரவேற்க ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட கோலம்

2 weeks ago 3

திருச்சி, ஜன.26:திருச்சி மணப்பாறையில் நடைபெற உள்ள சாரண, சாரணியர்களை வரவேற்கும் விதமாக ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ல பிரம்மாண்ட கோலம் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. “பாரத சாரண சாரனியர் இயக்கதின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி” என்ற தலைப்பில் மாபெரும் நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வரும் 28 முதல் பிப்ரவரி 3ம்தேதி வரை நடைபெற உள்ளது. சாரண சாரணியர்கள் மற்றும் அதிகாரிகளை அன்புடன் வரவேற்கும் வகையில், விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 400 சதுர அடியில் கோலம் வடிவமைக்கப்பட்டது.

இதனையடுத்து ரயில்கள் மூலம் வரும் சாரண சாரணியர்களை வரவேற்கும் விதமாக திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு பிரம்மாண்ட கோலம் வரையப்பட்டது. இந்த கலைப்படைப்பு, இந்திய அஞ்சல்துறை. இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு, கலைஞர் 100 மற்றும் சாரண சாரணியர் இயக்கத்தின் சின்னம், அத்தியாவசிய நிகழ்வு விவரங்கள் மற்றும் இருப்பிட வழிகாட்டுதலை வழங்கும் கியூஆர் குறியீடுகளையும் முக்கியமாகக் காட்டுகிறது. மத்திய மண்டலம், தமிழ்நாடு வட்டம், இந்திய அஞ்சல் துறை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ள கோலம் இந்த பெருந்திரளணியில் பங்கேற்பவர்களை உற்சாகமாக வரவேற்கும். இந்த பெருந்திரளணியில் 86 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் உட்பட 25,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வாரம் நடைபெறும் இந்த பெருந்திரளணியில் பல்வேறு ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகள் இடம்பெறும். அங்கு அமைக்கப்பட்டுள்ள இந்திய அஞ்சல் அரங்கில் மாதிரி அஞ்சல் அலுவலகம், எனது அஞ்சல்தலை கவுண்டர்கள், அஞ்சல்தலை கண்காட்சி மற்றும் கற்றல் ஆய்வகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

The post சாரண, சாரணியர்களை வரவேற்க ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட கோலம் appeared first on Dinakaran.

Read Entire Article