![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39080808-east.webp)
சென்னை,
கிழக்கு கடற்கரை ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவது;-
கட்டக் ரெயில்நிலைய கட்டுமானப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்துத் தடை காரணமாக, ரெயில் சேவைகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுவதாக கிழக்கு கடற்கரை ரெயில்வே அறிவித்துள்ளது:
· பிப்ரவரி 16, 23, மார்ச் 02, 09 மற்றும் 16, 2025 ஆகிய தேதிகளில் இரவு 12.00 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் ரெயில் எண் 12515 கோயம்புத்தூர் - சில்சார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கட்டாக்கில் நிறுத்தத்தைத் தவிர்த்து, பரங், நராஜ் மார்த்தாபூர் மற்றும் கபிலாஸ் சாலை வழியாக இயக்கப்படும். நராஜ் மார்த்தாபூரில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும்
· பிப்ரவரி 17, 18, 24, 25, மார்ச் 03, 04, 10, 11, 17, 2025 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரெயில் எண் 22643 எர்ணாகுளம் சந்திப்பு - பாட்னா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கட்டாக்கில் உள்ள பரங், நராஜ் மார்த்தாபூர் மற்றும் கபிலாஸ் சாலை வழியாக இயக்க திருப்பி விடப்படும். நராஜ் மார்த்தாபூரில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும்.
· ரெயில் எண். 12509 SMVT பெங்களூரு - குவஹாத்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக) பிப்ரவரி 19, 20, 21, 26, 27, 28, மார்ச் 05, 06, 07, 12, 13, மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு SMVT பெங்களூருவிலிருந்து புறப்படும் ரெயில், கட்டாக்கில் உள்ள பரங், நராஜ் மார்த்தாபூர் மற்றும் கபிலாஸ் சாலை வழியாக இயக்கப்படும். நராஜ் மார்த்தாபூரில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.