சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்க நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்

2 hours ago 1

கேப்டவுன்,

8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 8ம் தேதி லாகூரில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெம்பா பவுமா தலைமையிலான அந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடம்பெற்றிருந்தார். இவர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான தென் ஆப்பிரிக்க அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் இந்த முத்தரப்பு தொடர் மற்றும் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து ஜெரால்ட் கோட்ஸி விலகியுள்ளார். இடுப்பு வலி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

Read Entire Article