லாகூர்: 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அம்பயர் நிதின் மேனனும், மேட்ச் ரெஃப்ரீ ஜவகல் நாத்தும் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நிதின் மேனன் தனது முடிவுக்கு தனிப்பட்ட காரணம் என்று கூறி இருக்கிறார். தற்போது ஜவஹல் நாத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்வதில் இருந்து விடுப்பு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட மறுத்து இருந்தது. அதனால், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி போன்ற பல அணிகள் பங்கேற்கும் தொடர்களில் அம்பயர்கள் தங்கள் சொந்த அணியின் போட்டிகளில் பணியாற்ற ஐசிசி அனுமதிப்பதில்லை. அதனால் நிதின் மேனன் மற்றும் ஜவகல் நாத் துபாயில் இந்தியா ஆடும் போட்டிகளிலும் பணியாற்ற முடியாது. இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேட்ச் ரெஃப்ரீயாக இருக்கும் ஜவகல் நாத், தான் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் சிறிது காலமாக தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களில் மேட்ச் ரெஃப்ரீயாக செயல்பட வேண்டி பல்வேறு நாடுகள் மற்றும் ஊர்களுக்கு பயணம் செய்து வருவதை காரணமாகக் கூறி விடுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
The post சாம்பியன்ஸ் டிராபி ஜவஹல் நாத் பாகிஸ்தான் செல்ல மறுப்பு appeared first on Dinakaran.