சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு கட்டுப்பாடுகள் விதித்த பி.சி.சி.ஐ.

1 week ago 4

மும்பை,

நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

முன்னதாக அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.

அதன்படி சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கான கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

பி.சி.சி.ஐ. விதித்துள்ள கட்டுப்பாடுகள் விவரம் பின்வருமாறு:-

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் போதும், பயிற்சி முடிவடைந்த பின்னரும் அணியினருடன்தான் பயணிக்க வேண்டும். பயிற்சியை முடித்து விட்டு சீக்கிரம் கிளம்ப கூடாது. அணியினருடன்தான் செல்ல வேண்டும்.

சுற்றுப்பயணத்தின்போது வீரர்கள் தனிப்பட்ட போட்டோசூட் அல்லது விளம்பர நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ளக்கூடாது.

தனிப்பட்ட மேலாளர்கள், சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளடங்கிய தனிப்பட்ட பணியாளர்களை அழைத்து செல்ல தடை.

விதிமுறைகளில் தளர்வுகள் வேண்டுமெனில் அணி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை பி.சி.சி.ஐ. விதித்துள்ளது.

இந்த விதிமுறைகளை அமல்படுத்தி கண்காணிக்க இந்திய அணியின் மேலாளராக ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் தேவ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article