சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு எந்த சாதகமும் இல்லை - கிளென் மெக்ராத்

4 hours ago 2

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.

ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி கோப்பையை வென்று விட்டதாக பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இருப்பினும் அதற்கெல்லாம் கவலைப்படாத இந்திய அணி களத்தில் நன்றாக செயல்பட்டு கோப்பையை வென்றது.

இந்நிலையில் டி20 போட்டிகள் ராஜாங்கம் நடத்தும் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெறும் மந்திரத்தை பெரும்பாலான அணிகள் தவற விட்டுள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளென் மெக்ராத் கூறியுள்ளார். எனவே இந்திய அணிக்கு எந்த சாதகமும் இல்லை என்று தெரிவிக்கும் மெக்ராத் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இனிமேலும் பாகிஸ்தானுக்கு இந்தியா பயணிக்காது. எனவே அவர்களது போட்டிகளை துபாயில் விளையாடுவது மட்டுமே ஒரே வழி. அங்கே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடிய இந்தியாவை நீங்கள் பாராட்ட வேண்டும். சுழலுக்கு சாதகமான மைதானத்தில் எப்படி விளையாடுவது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு சாதகம் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. இந்தியாவின் ஐ.பி.எல். மற்றும் டி20 போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான விஷயத்தைக் கொண்டுள்ளது.

இந்தியா தங்களது விளையாட்டை நன்றாக தெரிந்து தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவது முக்கியம். அதே சமயம் ஒருநாள் போட்டிகளை காப்பாற்றுவதும் முக்கியம். இந்தியா ஒருநாள் போட்டிகளை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். அப்படிப்பட்ட இந்திய அணியை தாண்டி சிறப்பாக விளையாடி வெல்வது மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கும். இந்தியாவுக்கு சவால் விடுக்கப்படுவதை நான் விரும்புகிறேன். ஆனால் இந்தியா தரமான அணி" என்று கூறினார்.


Read Entire Article