சாம்பியன்ஸ் டிராபி: அஸ்வின் தேர்வு செய்த லெவன் அணி.. யாருக்கெல்லாம் இடம் ..?

2 hours ago 4

சென்னை,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை உச்சி முகர்ந்தது.

இந்நிலையில் இந்த தொடரில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்து அறிவித்துள்ளார். இதில் இந்தியாவின் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், முகமது ஷமி ஆகியோரை அவர் தேர்வு செய்யாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை.

அஸ்வின் தேர்வு செய்த அணி விவரம்:

ரச்சின் ரவீந்திரா, பென் டக்கெட், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்லிஸ், டேவிட் மில்லர், அஸ்மத்துலா ஒமர்சாய், மைக்கேல் பிரேஸ்வெல், குல்தீப் யாதவ், மேட் ஹென்றி, வருண் சக்ரவர்த்தி

12-வது வீரர்: மிட்செல் சாண்ட்னர்.

Read Entire Article