
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் ஸ்ரீலீலா மற்றும் நிதின் இணைந்து நடித்துள்ள படம் ராபின்ஹுட். இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 28-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில் இந்த இப்படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த டேவிட் வார்னர், "இந்திய சினிமாவே, இதோ நான் வருகிறேன். ராபின்ஹுட் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் படப்பிடிப்பை முழுமையாக என்ஜாய் பண்ணிணேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வார்னர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது மைதானத்தில் வைத்தே புஷ்பா பட ஸ்டைலை செய்து காட்டி இந்திய ரசிகர்களை கவர்ந்தவர். சினிமா டயலாக் மற்றும் பாடல்களுக்கு அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.