சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணி எது? - அஸ்வின் கணிப்பு

15 hours ago 2

புதுடெல்லி,

8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'துபாயில் விளையாடுவது இந்திய அணிக்கு உள்ளூர் சூழல் போன்று சாதகமான அம்சமாகும். அதே சமயம் இங்கு இந்தியாவை எதிர்த்து ஆடும் மற்ற அணிகளுக்கு கிட்டதட்ட வெளிநாட்டு சீதோஷ்ண நிலையில் விளையாடுவது போல் இருக்கும். இது தான் மற்ற அணிகளுக்கு உள்ள பிரச்சினையாகும். இங்கு 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வலுவாக இருப்பதாக கருதுகிறேன். நியூசிலாந்து அணியில் டிம் சவுதி, டிரென்ட் இல்லாவிட்டாலும் கூட, அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் பிரேஸ்வெல், பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர் உள்ளனர். இந்தியாவுக்கு சவால் அளிக்கக்கூடிய அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று.

ஆஸ்திரேலியாவையும் ஒதுக்கி விட முடியாது. ஸ்டீவன் சுமித் அந்த அணியை வழிநடத்த போகிறார். சுமித், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், லபுஸ்சேன் ஆகியோர் நிச்சயம் அந்த அணியை அரைஇறுதிக்கு அழைத்து செல்வார்கள். ஆஸ்திரேலியா எப்போதும் சாம்பியன் அணி என்பதில் நம்பிக்கை உண்டு. இது போன்ற பெரிய போட்டிகளில் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனாலும் அவர்களிடம் இப்போது பந்து வீச்சில் சில சிக்கல்கள் உள்ளன. சுமித்தின் பேட்டிங் பார்ம் மற்றும் கேப்டன்ஷிப்பை பொறுத்து அவர்களது வெற்றி வாய்ப்பு அமையும்' என்றார்.  

Read Entire Article