வெலிங்டன்: 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் பிப்.19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீரர்களின் பட்டியலை அறிவிக்க இன்று கடைசி நாள் ஆகும். இந்தியா உள்ளிட்ட சில அணிகள் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சாம்பியன் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன், கான்வே, டேரில்மிட்செல், உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அணி வீரர்கள் விபரம்: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்.
The post சாம்பியன் டிராபி தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு appeared first on Dinakaran.