சாம்பவிகா பள்ளியில் உணவுத் திருவிழா

3 months ago 14

சிவகங்கை, அக். 25: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உணவுகளை காட்சிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளான சிறுதானியம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. சிறப்பான உணவு வகைகள் தயார் செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பள்ளிச் செயலர் சேகர் தொடங்கி வைத்து பாரம்பரிய உணவின் நன்மைகள் குறித்து பேசினார். இதில் தலைமையாசிரியர்கள் தியாகராஜன், முத்துபஞ்சவர்ணம், உடற்கல்வி ஆசிரியர்கள் தடியப்பன், சரவணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post சாம்பவிகா பள்ளியில் உணவுத் திருவிழா appeared first on Dinakaran.

Read Entire Article