சாம்சங் தொழிலாளர் பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு சுமுகத்தீர்வு காண வேண்டும்: வைகோ அறிக்கை

3 months ago 21

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 1800க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம், இந்நிறுவனத்தில் சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4வது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

1500 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த வேலை நிறுத்தம் முடிவு காண வேண்டுமெனில் தமிழக அரசு மேலும் கூடுதல் தலையீடு செய்து, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். தொழிலாளர் துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு 5 முறை பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. ஆனால், உடன்பாடு எதுவும் காணப்படவில்லை. எனவே தமிழ்நாடு அரசு சாம்சங் இந்தியா நிறுவனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கி தொழிற்சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post சாம்சங் தொழிலாளர் பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு சுமுகத்தீர்வு காண வேண்டும்: வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article