சென்னை: சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனால் விரைவில் தீர்வு காணப்பட்டு போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் அமைச்சர்கள் தலையிட்டு இதற்கு தீர்வு காணுமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். முதல்வரின் அறிவுறுத்தலை தொடர்ந்து அமைச்சர்கள் மூவரும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.