சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம்

4 weeks ago 7

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செவல்பட்டியி தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில், இன்று பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து வெளியேறியதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

வெடி விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆலைக்குள் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறியதால் தீயை அணைக்கு பணியில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் முழுவதும் தரைமட்டமானது. பட்டாசு விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article