
விருதுநகர்,
சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்தால் ஒரு மணி நேரமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. பட்டாசு ஆலையில் சுமார் 50 அறைகள் உள்ள நிலையில் இதுவரை 15 அறைகள் சேதமடைந்துள்ளன. பக்கத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கும் தீ பரவிய நிலையில் அங்குள்ள பட்டாசுகளும் வெடித்துச் சிதறுகின்றன.
இதனிடையே வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.