சாத்தான்குளம்,மார்ச் 10: சாத்தான்குளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபாலரசி தலைமையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி (பயிற்சி) தேவி அக்ஷயா முன்னிலையில் நடந்தது. முகாமில் செக் மோசடி வழக்கு மூலம் ரூ.5 லட்சத்து 30 ஆயிரமும், வாகன வழக்கு சம்பந்தமாக ரூ.86 ஆயிரத்து 250ம், சிறுகுறு வழக்குகள் மூலமாக ரூ,5,750 என மொத்தம் ரூ.6 லட்சத்து 73 ஆயிரத்து 750 பெறப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் ஜோஜெகதீஷ், மணிமாறன், ஈஸ்டர் கமல், அழகு ராம
கிருஷ்ணன், கணேஷ், அன்றோ, ஷீபா ஐரின், லத்திஷ், கவுசல்யா, மில்பா, நெற்றில் சுதா, பாத்திமா, கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சாத்தான்குளத்தில் லோக் அதாலத் appeared first on Dinakaran.