சென்னை: உலக கிளைக்கோமா வாரத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும் 31-ம் தேதி வரை இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. கிளைக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. உலக கிளைக்கோமா (கண் அழுத்த நோய்) வாரம் மார்ச் 9 முதல் 15-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. ‘எதிர்காலத்தை தெளிவாக காணுங்கள்’ என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.
கண் அழுத்த நோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பார்வை திறன் குறைவதை தடுக்க முடியும். அலட்சியமாக இருந்தால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும் 31-ம் தேதி வரை இலவச கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.