சாத்தான்குளம், ஏப்.4: சாத்தான்குளத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இளம்வழக்கறிஞர்கள் இருவர், வழக்கு சம்பந்தமாக சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் சென்றபோது அப்போது அங்கிருந்த டிஎஸ்பி சுபக்குமார், இவர்களை அவமரியாதை செய்ததுடன் வழக்குப்பதிவதாக மிரட்டியதாகவும் கூறப்
படுகிறது இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்த சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்கத்தினர் நேற்று (3ம் தேதி) முதல் நாளை (5ம் தேதி) வரை தொடர்ந்து 3 நாட்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர்.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் நேற்று மழை பெய்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் டிஎஸ்பியை கண்டித்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்கத் தலைவர் வில்லின் பெலிக்ஸ் தலைமையில் வழக்கறிஞர் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மூத்த வழக்கறிஞர் அந்தோனி ரமேஷ்குமார், சிவபாலன், இளங்கோ, சுரேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் ஈஸ்டர் கமல், கணேஷ், முத்துகிருஷ்ணன், கபில்குமார்,வசந்த், ஹாரிஸ், அருண்குமார், மணிகண்டன், பிரேம்குமார், கிருபாகரன், சுப்பையா, கோபால கிருஷ்ணன், ராமச்சந்திரன், செல்வ மகராஜன், முத்துராஜ், பிரின்ஸ், மவுலி, முத்துகணேஷ், இளவரசன், ரோஸ்லின், நெட்டில், கவுசல்யா, சிவ மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சாத்தான்குளம் டிஎஸ்பி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு அவரை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
The post சாத்தான்குளத்தில் டிஎஸ்பியை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.