
சென்னை,
சென்னை குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரமோற்சவம் மே 13-ம் தேதி முதல் 16 வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், விழாவுக்கு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படுகிறது, மற்றவர்களிடம் வசூலிக்கப்படுவது இல்லை எனக் கூறி குன்றத்தூரை சேர்ந்த இல.பாண்டியராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாதியை காரணமாகக் காட்டி, கோவில் விழாவில் நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவமே. இந்நாட்டில் தீண்டாமை பல்வேறு வழிகளில், வடிவங்களில் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் இதுவும் ஒன்று. அனைத்து சமூகத்தினரையும் நன்கொடை வழங்க அனுமதிக்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் நன்கொடை தர அனுமதி கோரும் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு வழங்கு வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி பரத சக்கரவர்த்தி. கடவுளின் முன்பு சாதி இருக்கக்கூடாது என ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நீதிபதி சுட்டிகாட்டினார்.