சங்கரன்கோவிலில் சாதி மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், 4 பேரின் ஆயுள் தண்டனையையும் ரத்து செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள உடப்பன்குளம் கிராமத்தில் 2014-ல் ஆங்கிலப் புத்தாண்டின்போது கொடிக்கம்பம் அருகே பட்டா வெடித்தது மற்றும் இறந்தவர் உடலை குறிப்பிட்ட தெரு வழியாக எடுத்துச் செல்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.