சாதி அரசியல் பெயரில் சிலர் அமைதியை சீர்குலைக்க நினைக்கின்றனர் - பிரதமர் மோடி

2 days ago 1

டெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமின் பாரத் மோட்சாவ் என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கிராமப்புற வளர்ச்சி, கிராமப்புற கைவினைக் கலைஞர்களால் வடிவமைக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்துதல், அவர்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சாதி அரசியல் பெயரில் சிலர் அமைதியை சீர்குலைக்க நினைக்கின்றனர் என்றார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கிராமப்புறங்களில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலிமைபடுத்த நாம் உழைக்க வேண்டும். சாதி அரசியல் பெயரில் சிலர் அமைதியை சீர்குலைக்க நினைக்கின்றனர்.

நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கடந்தும் கிராமங்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தியடையாமல் உள்ளன. கடந்த அரசாங்கம் கிராமப்புறங்களில் வாழும் மக்களை புறக்கணித்தது. ஆனால், எனது தலைமையிலான அரசு கிராமங்களை மேம்படுத்தியது. புறக்கணிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது' இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article