சாதனை எதுவும் செய்யாததால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி; சாதனைகள் செய்ததால்தான் 40க்கு 40 தொகுதிகளில் திமுக வெற்றி: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்

20 hours ago 1

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய மானிய ேகாரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு போளூர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) பேசியதாவது:
தேசிய அளவில் ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான ‘கிரிஷி கர்மான்’ விருதினை ஐந்து முறைக்கும் மேலாக பெற்று, வேளாண்மைத் துறையில் சாதனைகளை அதிமுக ஆட்சி படைத்தது.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: நாங்கள் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒன்றுமே செய்யாமல் சாதனை செய்தேன், செய்தேன் என்று சொல்கிறார்கள். அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்து நிற்கிறார்கள். இதுதான் அவர்கள் சாதனை. தையெல்லாம் செய்திருந்தார்கள் என்றால் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றியடைந்திருப்பார்கள். தற்போது எதிர்க்கட்சியாக இருந்திருக்க மாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்க மாட்டார்கள். இந்த சாதனைகளை செய்ததால்தான் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி:
மாங்கனி மாவட்டம் ஆத்தூர் அருகே, தலைவாசலில் ரூ.1,200 கோடியில் 1,110 ஏக்கரில் ஆசியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. ஆனால், நீங்கள் செய்வது என்ன, படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: தலைவாசல் கூட்ரோட்டில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் கடந்த 13-1-2025 ஜனவரி 13ம்தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்களுக்கு பயன்படுகின்றதா, அந்த திட்டத்தை யார் கொண்டு வந்தார்கள் என்று பார்க்காமல் அதை நல்ல முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றவர் எங்கள் முதல்வர். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post சாதனை எதுவும் செய்யாததால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி; சாதனைகள் செய்ததால்தான் 40க்கு 40 தொகுதிகளில் திமுக வெற்றி: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article