வாஷிங்டன்: சாட் ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம் என்று ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன் அறிவுறுத்தியுள்ளார். ஓபன்ஏஐ-யின் அதிகாரப்பூர்வ பாட்காஸ்ட் அறிமுக விழாவில் பேசிய சாம் ஆல்ட்மன், சாட்ஜிபிடியை மக்கள் அதிகம் நம்புகிறார்கள் என்ற மிக ஆச்சரியமான விஷயத்தை தான் கண்டறிந்தேன். செயற்கை நுண்ணறிவு என்பது தவறான தகவல்களை அளிக்க முடியாதது அல்ல மற்றும் செயற்கை நுண்ணறிவு தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியதே. சாட் ஜிபிடி பல அம்சங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அது இன்னும் பல தவறுகளைச் செய்கிறது.
எனவே, அதனை இந்த அளவுக்கு மக்கள் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் சாட்ஜிபிடி மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அவ்வாறு செய்யாதீர்கள். ஏனென்றால், செயற்கை நுண்ணறிவும் தவறுகளை செய்யும்” என்று அவர் நேரடியாகவே தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடிக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவரே இப்படிப் பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
The post சாட் ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம்: ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.